சினிமாவுலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது குறிப்பாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் தான் தமிழ் சினிமா உலகில் அதிக பட வாய்ப்பை அள்ளுகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கரும் சினிமா உலகில் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் முதலில் மருத்துவராக பயணிக்க ஆசைப்பட்டார். சில காரணத்தால் சினிமா பக்கம் திசை திரும்பி உள்ளார். முதலில் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன்.
திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் அதிதி சங்கர். விருமன் திரைப்படத்தில் இவரது நடிப்பு வேற லெவல் இருப்பதாகவும், இவரது நடனம் ஆகியவற்றை அண்மையில் பார்த்த எஸ் ஜே சூர்யா சொன்னது.
இவர் பார்ப்பதற்கு முதல் படத்தில் நடிப்பது போல தெரியவில்லை நிறைய படத்தில் நடித்த அனுபவம் இருக்கிறது என சொல்லி மெய்சிலிர்த்துப் போனார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படமொன்றிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் அதற்கான தகவலும் வெளியாகி உள்ளது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அசத்தி வருகிறார்.
அதிதி ஷங்கர் இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் உங்களுடைய நட்சத்திர க்ரஷ் யார் என்று கேட்டுள்ளனர் அதற்கு அவர் கூறியது. அந்த நட்சத்திர நடிகர் வேறுயாருமல்ல அண்மையில் இந்திய அளவில் பேசப்பட்ட படம் கேஜிஎஃப். இத்திரைப்படத்தின் ஹீரோ யாஷ் தான் என கூறி உள்ளார் இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது ஷேர் செய்து பரப்பி வருகின்றனர்.