மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த ஷங்கரின் மகள் அதிதி சங்கர்.!வைரலாகும் புதிய போஸ்டர்.

aditi-shankar

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படங்களால் ஏதாவது ஒரு பிரமாண்டத்தை காண்பித்து விடுவார் அதற்காகவே ரசிகர்கள் பெரும்பாலும் இத்திரைப்படத்தை பார்ப்பார்கள்.

அதனால் தான் இவருக்கு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரும் கிடைத்தது. சங்கருக்கு அதிதி சங்கர் என்ற மகள் இருக்கிறார் இவர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் விருமன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார் முத்தையா திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த திரைப்படம் அதிதி சங்கர் அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விருமன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே அதிதி சங்கர் அவர்களுக்கு சிம்பு உடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதாவது சிம்புவுடன் இணைந்து கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர்  புகைப்படம் மற்றும் வீடியோக்களை முன்னணி நடிகைகளைப் போல் வெளியிட்டு வருகிறார்.

aditi shankar
aditi shankar

இவர் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிதி வெளியிடும் புகைப்படம் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

aditi shankar

இதோ அவர் வெளியிட்டுள்ள மார்டன் புகைப்படங்கள்.