அதிதி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட் அடுத்தது அஜித் இயக்குனருடன்.! அட்ரா சக்க அட்ரா சக்க

aditi sangar
aditi sangar

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் விருமன். இந்த திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள். விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதிதி சங்கர் தற்போது பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்து உள்ளது ஆம் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில்  நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி சங்கர்.

இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் இந்த படம் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இறுதி ஆட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் நடிகை அதிதி தற்போது அஜித் பட இயக்குனரை கையில் போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிதி சங்கர் அவர்கள் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தின் இயக்குனர் அஜித் வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அடுத்ததாக அதிதி சங்கர் கமிட் ஆகியுள்ள படத்தின் இயக்குனர் விஷ்ணுவரதன் இவரோடு தான் அடுத்ததாக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் படம் இயக்காமல் வந்திருந்த விஷ்ணு அவர்கள் ஹிந்தியில் ஷெர்ஷா என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் அமோக வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் பல விருதுகளை வென்று குவித்தது. மீண்டும் தற்போது விஷ்ணுவர்தன் தமிழில் ரீ என்றி கொடுக்கிறார்.  இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அதிதி ஷங்கர் கமிட்டாகி உள்ளது பலருக்கும் ஆச்சிரியாத்தை ஏற்படுத்தியுள்ளது.