7G Rainbow colony: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வரும் செல்வராகவன் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் பல திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். அப்படி இவருடைய இயக்கத்தில் வெளியாகி காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய முக்கியமான திரைப்படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.
பொதுவாக ஒரு படம் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்து விட்டால் அதனுடைய இரண்டாவது பாகத்திற்காக காத்து வருவது வழக்கம். அப்படி தான் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்திற்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். விரைவில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வித்தியாசமான கதைகளத்துடன் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க, சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்களுடைய கேரக்டர் உன்னதப்பூர்வமான காதலை அழகாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது
அந்த வகையில் ரவி கிருஷ்ணா சோனியாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதன் காரணமாகவே 7ஜி ரெயின்போ காலனியின் 2வது பார்ட் வெளியில் வருமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் செல்வராகவன் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறியிருந்தார்.
அந்த வகையில் இந்த இரண்டாவது பாகத்தில் யார் ஹீரோ ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த படத்தில் ஹீரோவாக ரவி கிருஷ்ணன் நடிக்கிறாராம். ஆனால் ஹீரோயின் சோனியா கிடையாதாம் வேறு ஒரு நடிகை நடிப்பார் என கூறப்படுகிறது.
வித்தியாசமான கதைகளத்துடன் உருவாக இருப்பதாகவும் முதல் பாகத்தில் சோனியா இறந்து விடுகிற மாதிரி காட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் புது கதாபாத்திரத்தை தான் அறிமுகம் செய்ய செல்வராகவன் திட்டமிட்டு இருக்கிறாராம். எனவே இதற்காக நடிகை, நடிகர்கள் தேடும் பணியில் பட குழு இருந்து வரும் நிலையில் ஹீரோயினாக அதிதி சங்கர் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.
தற்பொழுது சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதிதி சங்கர் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து அதர்வாவின் தம்பி ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.