அதிதி ஷங்கர் என் தங்கச்சி மாதிரி.. கூல் சுரேஷ் திடீரென அந்தர்பல்டி அடிக்க காரணம் யார் தெரியுமா.?

cool-suresh

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் விருமன் இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே சுமார் 46 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில்  விருமன் படத்தை முதல் நாள் பார்த்த பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் வெளியே வந்து விமர்சனம் கொடுத்தார். அப்பொழுது கூல் சுரேஷ் திடீரென சங்கர் சார் நான் உங்கள் மகள் அதிதியை காதலிக்கிறேன் ஐ லவ் யூ அதிதி என எழுதப்பட்ட பேப்பர் உடன் சொல்லினார். மேலும் சங்கர் சார் நீங்கள் படத்தில் எப்படி காதலர்களை சேர்த்து வைக்கிறீர்களோ..

அதே போல என்னையையும், அதிதியையும் சேர்த்து வையுங்கள் இல்லை என்றால் கமிஷனர் அலுவலகம் போவேன் முதலமைச்சர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என தனக்கு வந்ததைப் பேசினார் கூல் சுரேஷ். இந்த செய்தி மிகப் பெரிய அளவில் வைரலானது. இதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து உடனே கூல் சுரேஷ் தானாகவே ஓடி வந்து பேசியது.

ஷங்கர் சார் என்னை மன்னித்து விடுங்கள் விருமன் படத்தில் வரும் தேன்மொழி கதாபாத்திரம் நான் படிக்கும் பொழுது தேன்மொழி என்ற ஒரு பெண் இருந்தால் அந்த பெண்ணை நான் காதலித்தேன் அதை பார்த்த விரக்தியில் இப்படி நடந்து கொண்டேன் அதிதி ஷங்கர் இனிமேல் என் தங்கச்சி மாதிரி என ஒரேடியாக அந்தர் பல்டி அடித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

shankar
shankar

திடீரென கூல் சுரேஷ் இப்படி அந்தர் பல்ட் அடிக்க என்ன காரணம் என்று பார்த்தால் கூல் சுரேஷ் அழைத்து சங்கர் சார்  சரமாரியாக விலாசியாகவும் உடனடியாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி கேட்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி மிரட்டி அனுப்பி உள்ளார் அதன் பிறகு கூல் சுரேஷ் அந்தர்பல்டி அடித்ததாக கூறப்படுகிறது.