நடிப்பை தாண்டி சமையலிலும் கலக்கும் நடிகை அதிதி ஷங்கர்.! எனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த உணவு இதுதான்..!

aditi-shankar-
aditi-shankar-

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் சிறு இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2, தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் ஆகிய படங்களை எடுத்து வருகிறார் இவர் ஒரு பக்கம் இப்படி ஓட மறுபக்கம் அவருடைய இளைய மகள் அதிதி ஷங்கர்.

விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது இந்த படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்..

நடிகை அதிதி ஷங்கர் மாவீரன் படத்தை தொடர்ந்து அடுத்த பல்வேறு புதிய படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறாராம். இப்படி இருந்தாலும் மறுபக்கம் மற்ற நடிகைகள் போல.. இவரும் சோசியல் மீடியா பக்கத்தில் க்யூட் மற்றும் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை அதிதி ஷங்கர் நான் நன்றாக சமைப்பேன். நான் போடும் ஆஃபாயில் எனது தந்தை சங்கருக்கு மிகவும் பிடிக்கும் வீட்டில் யார் இருந்தாலும் என்னை அழைக்கச் சொல்லி நான் போடும் ஆஃப் பாயிலை சாப்பிடுவார்.

மேலும் பேசிய அவர் எனக்கு பிரியாணி செய்ய தெரியும் ஸ்டப் முட்டை புர்ஜியும்  தான் சிறப்பாக செய்வேன் என கூறி உயிருக்கிறார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் நடிப்பையும் தாண்டி உங்களுக்கு ஏகப்பட்ட திறமைகள் இருக்கிறது எனக் கூறி இந்த செய்தியை வேற லெவலில் பரப்பி வருகின்றனர்.