ராஜலட்சுமிக்கு துரோகம் செய்த அதிதி சங்கர்..! கடும் கோபத்தில் ரசிகர்கள்..!

viruman
viruman

தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படத்திற்கு பிறகாக முத்தையா கார்த்தி கூட்டணியில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம் என்றால் அது விருமன் திரைப்படம் தான். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்தது மட்டும் இல்லாமல் அவருக்கு ஜோடியாக பிரபல பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தினை நடிகர் கார்த்திக்கின் அண்ணன் சூர்யா அவர்கள் தன்னுடைய 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தன்னுடைய இசையை கொடுத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான ராஜலட்சுமி அவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளார் ஆனால் திடீரென அவர் பாடல்  இந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டு அந்த பாடலை அதிதி சங்கரை வைத்து பாட வைத்துள்ளார்கள் இந்த பாடலை தான் திரையில் காட்டப் போவதாக செய்திகள் பரவி உள்ளது.

ஆனால் இதனை ராஜலட்சுமி இடம் பட குழுவினர்கள் தெரிவிக்காமலே இப்படி ஒரு செயலை செய்து விட்டார்களாம். ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் கூட சாமி சாமி என்ற பாடல் ராஜலட்சுமி பாடிய பாடல் ஆகும் இந்த பாடல் மாபெரும் வெற்றி பாடலாக அமைந்தது மட்டும் இல்லாமல் சூப்பர் ஹிட் அடித்தது.

இன் நிலையில் பெருமாள் திரைப்படத்தில் இவர் பாடிய பாடலும் மிகவும் சிறப்பாக தான் இருக்கும் என பலர் கூறிய நிலையில் அந்த பாடலை நீக்கிவிட்டு அதிதி சங்கரை பாட வைத்தது மிகப்பெரிய துரோகம் என பலர் கூறி வருகிறார்கள். எது எப்படியோ இந்த பாடல் ராஜலட்சுமி பாடியிருந்தால் கண்டிப்பாக ஹிட் அடித்திருக்கும் ஆனால் அதிதியை உள்ளே விட்டு குழப்பி விட்டார்கள்.