பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முத்தியா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விரும்பன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற நிலையில் நடிகை அதிதி சங்கருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புக் குவிய ஆரம்பித்தது.
தற்போது நடிகை அதிதி சங்கர் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் திரிஷாவை தோற்கடித்து விடுவது போன்ற உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நீங்களே நடித்து இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரமாதமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் ஐஷ்வர்யா ராயும், குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் நடித்துள்ளார்.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, உள்ளிட்ட பல முன்னணி நச்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது. மேலும் இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை த்ரிஷா.
அச்சி அசலாக அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடை அணிந்து கொண்டு அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நிகராக தற்போது சங்கரின் மகளான அதிதி சங்கரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் அதிதி சங்கர் பட்டுப்புடவையில் அசத்தலான லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.