நடிகர் பிரபாஸ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் நடிப்பில் வெளியாகிய பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அது மட்டுமில்லாமல் தற்பொழுது பிரபாஸ் ப்ராஜெக்ட் k, ஆதிபுருஷ், சாலர், ஸ்பிரிட் எனத் தொடர்ந்து நான்கு திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கிறது இதில் ஆதிபுருஷ் பிரபாஸின் சினிமா கேரியரில் 22 ஆவது திரைப்படமாக வெளியாகி உள்ளது கடந்த ஜூன் 16ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தை தன்ஹாஜி தி அன்சங் வாரியர் எனும் ஹிந்தி பட புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரீத்தி சனோன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மிகவும் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்.
ஆதி புருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது டி சீரிஸ் மற்றும் ரேட் ரோபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக இந்த திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி இருக்கும் நிலையில் மூன்று நாட்களில் உலக அளவில் 340 கோடி வரை ஆதி புருஸ் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் இந்த வசூல் பத்தாது என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என படக் குழு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.