தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் தொடர்ந்து முன்னணி வகித்து வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல சுவாரசியமான எபிசோடுகள் உடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கி வருகிறார்.
படித்த பெண்களை தனக்கும் தனது தம்பிகளுக்கும் திருமணம் செய்து வைத்த குணசேகரன் அவர்களை வீட்டில் வேலை செய்யும் அடிமைகளாக நடத்தி வருகிறார்கள். எனவே மருமகள்களும் அவர்கள் சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டி வரும் நிலையில் சக்தியின் மனைவியாக கடைசி மருமகளாக இந்த வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கும் ஜனனி அனைத்தையும் எதிர்த்து போராடுகிறார்.
இவ்வாறு மருமகள் ஜனனியுடன் சேர்ந்து ஆதி குணசேகர்னை எதிர்த்து கேள்வி கேட்டு வரும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்ப இல்லதரசிகள் மத்தியிலும் இந்த சீரியலுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் ஆதிரைக்கும் கரிகலனக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் டிஆர்பியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது.
ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யா அண்மையில் அவளை யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலால் எதிர்மறை விமர்சனங்கள் வந்த பொழுது நான் இந்த தொடரில் நடிப்பதை விட்டு போய்விடலாம் என்று நினைத்தேன் பிறகு மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை வந்தது என கூறியுள்ளார்.
இவ்வாறு ஆதிரையின் கேரக்டருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் விரைவில் அதிரை அருணுடன் சேர்வாரா என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜீவானந்தம் எப்படி அப்பத்தாவின் 40% சொத்துக்கள் மற்றும் ஆதிரையின் திருமணம் என அனைத்தையும் மாற்றுவார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.