சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுத்து ஆடும் பிரின்ஸ் பட நடிகை.! வெளியான பிம்பிலிக்கு பிளாப்பி லிரிகல் வீடியோ..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வரும் நிலையில் தற்போது இவர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக வெளிநாட்டு மாடல் அழகியான மரியா என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பிரின்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் என்பதால் இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அனு விஷ்வா என்பவர் இப்படத்தினை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பெண் இந்தியாவை முழுவதுமாக சுற்றி பார்க்க வேண்டும் என விரும்புகிறார் எனவே அந்தப் பெண் விரும்பும் இடங்களில் எல்லாம் சுத்திக்காடும் நபராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து இந்தியா முழுவதும் சுற்றி பார்க்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்படுகிறது.

இதனால் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் இதுதான் பிரின்ஸ் படத்தின் கதைகளம். பிரண்ட்ஸ் படம் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டு தான் உருவாக்கப்பட்ட வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் பிரின்ஸ் படத்தில் இருந்து பிம்பிலிக்கி பிளாப்பி என்ற பாடலை தமன் இசை அமைத்துள்ளார். இவ்வாறு திரைப்படத்தின் கதையிலிருந்து பாடல் வரை அனைத்தும் தெலுங்கு ரசிகர்களுக்காகவே முழுக்க முழுக்க உருவாகி இருக்கிறது.

இதனால் தற்பொழுது இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கவனத்தை கவரவில்லை. இருந்தாலும் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் சிறப்பாக நடனமாடியுள்ளார் என தொடர்ந்து ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.