நடிகை அடா சர்மா இந்திய சினிமாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். மும்பையில் பிறந்த இவர் தமிழ் பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை எஸ் எல் ஷர்மா மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
திரைப் படங்களில் நடிப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் மும்பையிலுள்ள பல கலைகளில் கலந்துகொண்டுள்ளார். ஆனால் அவரின் சுருள்முடி மற்றும் இளம்வயது தோற்றத்திற்காக நிராகரிக்கப்பட்ட பின்பு 2008 ஆம் ஆண்டு விக்ரம் படத்தை இயக்கிய பாலிவுட் திரைப்படமான 1920 என்னும் திகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் தமிழில் முதன்முதலாக சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். இந்த நிலையில் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பை பிடிப்பதற்காக சமூக வலைதளத்தை அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது இவர் புடவை கட்டிக்கொண்டு அந்தர் பல்டி அடித்து அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.
#MondayMotivation
No need to be a BEACH 🙃 Did you SEA what I did there?WATER you thinking? WHALE done bol do 🤣 #100YearsOfAdahSharma #1920to2020 pic.twitter.com/aIwD5Oxi3w— Adah Sharma (@adah_sharma) January 11, 2021