சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான பல நடிகைகள் உள்ளார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இதன் மூலம் இவருக்கு மேயாதமான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இது தான் அவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்பொழுது பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்தவகையில் குருதி ஆட்டம்,ஹரிஷ் கல்யானுடன் ஒரு படம், விஷாலுடன் ஒரு படம், இந்தியன்2, பொம்மை மற்றும் அகம்பிரம்மாஸ்மி உள்ளிட்ட திரைப்படங்களில் தற்பொழுது வரையிலும் கமிட்டாகியுள்ளார்.
இவ்வாறு இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டதட்ட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் மேக்கப் இல்லாமல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ இந்த புகைப்படம்.