தனது முதல் படத்திலேயே கிங் என நிறுபித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா!! பாராட்டும் திரைப்பிரபலங்கள்..வைரலாகும் வீடியோ..

தற்பொழுது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என்று அனைத்து சமூக வலைத்தளத்திலும் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான்.

இவர்கள் திருமணத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ரௌடி  பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இருவரும் இணைந்து நடத்தி வருகிறார்கள். இந்த ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் கூழாங்கல்.

சமீபத்தில் கூட  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கிய கூழாங்கள் திரைப்படம்  சர்வதேச டைகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்கள். அவ்வபோது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வந்தது.

இந்நிலையில் கூழாங்கள் திரைப்படம் 2021ஆம் ஆண்டிற்கான டைகர் விருதை  பெற்றுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்த முதல் படமே டைகர் விருதை பெற்றுள்ளது என்பதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.