சினிமாவில் தான் நடிக்கும் ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால் அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க அந்த நடிகர்கள் இருப்பதை விட இரண்டு மடங்கு சம்பளம் பெறுவார்கள். அதேபோல நடிகைகளும் ஒரு படம் வெற்றியடைந்தால் அதிலிருந்து தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி கொள்கிறார்கள் அப்படி கோலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்..
நயன்தாரா:- நடிகை நயன்தாரா 2022 ஆம் ஆண்டு காத்து வாக்குல ரெண்டு காதல் ஓட்டு போல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது. இதனை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
சமந்தா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா தற்போது ஒரு சில திரைப்படங்களை மட்டும் நடித்துள்ளார் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் இவர் ஒரு படத்திற்கு 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
கீர்த்தி சுரேஷ்:- 2022 ல் வெளியான சாணி காயிதம், குட் லக் சகி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே :- பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டே ஒரு திரைபடத்திரக்கு 4 கோடி ரூபாய் வரை ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
காஜல் அகர்வால்:- தற்போது உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால் இவர் ஒரு திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
திரிஷா கிருஷ்ணன்:- இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் இவருடைய கதாபாத்திரமான குந்தவை தேவி கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் ஒரு திரைப்படத்திற்காக 4 கோடி ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சாய் பல்லவி :- இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான கார்க்கி படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டி ரசிகர் மத்தியில் நல்ல பெயர் எடுத்துக் கொண்டார். பொதுவாகவே இவருடைய கியூட்னஸுக்கு ஏராளமான ரசிகர்கள் விழுந்து கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இதனைத் தொடர்ந்து கார்க்கி படத்தில் நடித்த இவர் மேலும் பிரபலமானார். இவர் தற்போது ஒரு திரைப்படத்திற்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
ஆண்ட்ரியா:- பின்னணி பாடகியாக இருந்த ஆண்ட்ரியா தமிழில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் 2022 இல் பிசாசு 2, மாளிகை, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை ஆண்ட்ரியா ஒரு திரைப்படத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
பிரியங்கா மோகன்:- நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அறிமுகமான முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இவர் பல ரசிகர்களின் கிரஷ் ஆகவே மாறிவிட்டார். இதனைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மேலும் பிரபலமானார் இவர் ஒரு திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
நித்யா மேனன் :- 2022 கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவரின் இந்த ஷோபனா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து நடிகை நித்யா மேனன் ஒரு திரைப்படத்திற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.