காதல் என்ற பெயரில்  சிம்புவுக்கே விபூதி அடித்த நடிகைகள்.! காவி வேட்டி, கருப்பு வேட்டிக்கு இனி குட் பாய்.! எல்லாத்துக்கும் காரணம் இந்த இளம் நடிகை தான்..

simbu-love
simbu-love

சினிமாவில் ஒரு சில நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்பொழுது ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் சிம்பு உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, மின்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்க வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், தாய் தங்கை பாசம், என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

பிறகு ஹீரோவாக 2002 ஆம் ஆண்டு தன்னுடைய அப்பா டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக கால் தடம் பதித்தார். அதனை தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காள சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, கோவா, வானம், ஒஸ்தி போடா போடி, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் இவர் சரியாக ஷூட்டிங் வருவதில்லை எனவும் உடல் எடை அதிகரித்ததும் சரியாக நடனம் ஆடவில்லை எனவும் பல விமர்சனங்கள் இருந்தது அதனால் இவருக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது அது மட்டும் இல்லாமல் படங்களில் சரியாக நடிப்பதில்லை என பல விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

பின்பு காலப்போக்கில் இந்த அனைத்து விமர்சனங்களையும் தவுடு பொடியாக்கி செக்கச்சிவந்த வானம் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தன் நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அதனைத் தொடர்ந்து வந்த ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஈஸ்வரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வகையில் வெற்றி பெறவில்லை இதனை தொடர்ந்து மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தார்.

அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் மீண்டும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று அடுத்து யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்தார். அதனைத் தொடர்ந்து பத்து தல திரைப்படத்தில் நடித்து மீண்டும் வெற்றி வாகை சூடினார், சிம்பு மடமடவென மின்னல் வேகத்தில் வளர்ந்தாலும் அவரை தொடர்ந்து சர்ச்சைகளும் காதல் தோல்விகளும் ஏமாற்றங்களும் கிசுகிசுகளும் அதிகம் விமர்சிக்கப்பட்டன.

அந்த வகையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை சிம்பு காதலித்ததாகவும் பின்பு சிம்புவை ஏமாற்றிவிட்டு தனுசுக்கு கழுத்த நீட்டி விட்டதால் சிம்பு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் பிறகு அதிலிருந்து மீண்டு வந்து நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கினார் ஆனால் அவருடன் தனிமையாக இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியது இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது இதனால் சிம்பு பெயர் மிகவும் டேமேஜ் ஆனது.

ஆனாலும் நயன்தாராவை தொடர்ந்து ஹன்சிகாவை காதலித்து வந்ததாக சமீபத்தில் கிசுகிசுப்பு வெளியானது அவரும் பாய் பாய் சொல்லிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இனிமேல் காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் என காவி வேட்டி, கருப்பு வேட்டி என சுற்றித் திரிந்து வந்தார் ஆனால் மீண்டும் ஒரு இளம் நடிகை அவர் மனதில் காதலை தட்டி எழுப்பியுள்ளார்.

அவர் வேறு யாரும் கிடையாது ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வால் தான் சிம்பு கூடவே அவருக்கு வேண்டிய அனைத்தையும் தற்போது இறுதியாக செய்து வருகிறாராம் கிட்டத்தட்ட அவர் மேனேஜர் போன்று இருந்து வருவதாக பெரும் பரபரப்பாக ஹோலிவுட் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது.