Tamil actress: சினிமாவைப் பொறுத்தவரை அழகு இருந்தால் மட்டுமே தொடர்ந்து முன்னணி நடிகை என்ற மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் சமீப காலங்களாக இருந்து வந்தாலும் இழுத்து போத்திக்கொண்டு நடித்த நடிகைகள் கூட கவர்ச்சியில் அதிக ஆர்வம் காமித்து வருகின்றனர். அப்படி இழந்த மார்க்கெட்டை பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் படும் வைரலாக இருந்து வரும் 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம். இவ்வாறு எல்லை மீறிய கவர்ச்சியில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் சொல்லும் அளவிற்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
லைலா: ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை லைலா விஜயகாந்தின் கள்ளழகர் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில் திடீரென தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டாகிவிட்டார்.
தற்பொழுது இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவ்வாறு பல்லு போன காலத்தில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் லைலா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லும் அளவிற்கு நல்ல கேரக்டர் அமையவில்லை. அப்படி கடைசியாக வதந்தி என்ற வெப் சீரியல் மற்றும் கார்த்தியின் சாரார் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
நிக்கி கல்ராணி: தமிழ், மலையாளம் என முன்னணி நடிகையாக இருந்து வந்த நிக்கி கல்ராணி சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தும் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
மீரா ஜாஸ்மின்: இழுத்து போத்திக்கொண்டு சண்டக்கோழி, புதிய கீதை, ரன் போன்ற திரைப்படங்களில் நடித்து இளசுகளின் மனதை கவர்ந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் நிலையில் தற்போது இவருக்கு 41 வயது ஆனாலும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் படும் லோக்கலாக இறங்கி ஹாட் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
அர்ச்சனா குப்தா: மாடல் அழகியான அர்ச்சனா குப்தா தமிழ், கன்னடா, மலையாளம், தெலுங்கு மற்றும் ரஷ்ய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்பொழுது இவருக்கு 33 வயதாகும் நிலையில் எதிர்பார்க்கும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
காஜல் அகர்வால்: விஜயுடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா மற்றும் அஜித்தின் விவேகம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான காஜல் அகர்வால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைவுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. தற்பொழுது இவர் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் அதே நேரத்தில் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.