6-ல் இருந்து 60 வரை ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் மத்தியில்.. சூப்பர் ஸ்டார் படத்தை தவறவிட்ட நடிகைகள்..

rajini, sneha, kiran
rajini, sneha, kiran

Actresses who missed Superstar : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகர்களுக்காக படம் ஓடியது அப்படி முன்னணி நடிகர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இன்று வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி சூப்பர் ஸ்டாருடன் நடிக்க எண்ணற்ற நடிகர் நடிகைகள் ஆசைப்படுவார்கள் அதிலும் நடிகைகள் எப்படியாவது ஒரு திரைப்படத்திலாவது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து தவறவிட்டு இன்றுவரை புலம்பி கொண்டிருக்கும் மூன்று நடிகைகளை இங்கே காணலாம்.

தொப்புளில் பம்பரம் விட்டிருக்காங்க.. ஆம்லெட் போட்டுருக்காங்க.. இது என்ன ரோசா பூ விளையாட்டு… காதலர் தினத்தில் வைரலாகும் தர்ஷா குப்தா புகைப்படம்

நடிகை சினேகா: நடிகை சினேகா கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமா துறையில் நடித்துக் கொண்டிருக்கிறார் இவர் தற்பொழுது பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு குழந்தை குட்டிகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சினேகா தான் ஆனால் அப்பொழுது புதுப்பேட்டை இன்னும் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதாம்.

கிரண்: ஜெமினி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் கிரண் இவர் கமலுடன் அன்பே சிவம், பிரசாந்த் அவர்களுடன் வின்னர் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதேபோல் இவர் ரஜினியின் பாபா திரைப்படத்தில் மனீஷா கொய்ராலா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது ஆனால் ஜெமினி திரைப்படத்தில் கமிட்டாகி இருந்ததால் இவர்கள் நடிக்க முடியாமல் போனது.

மீனா மீது சந்தேகப்படும் செந்தில்.! உண்மை தெரிந்து விடுமோ என பயப்படும் கோமதி.!!பாண்டியன் ஸ்டோர்..

சிம்ரன்: இடுப்பழகி சிம்ரன் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க வேண்டியது இந்த திரைப்படத்தில் சிம்ரன் ஒரு சில நாட்கள் நடித்து வந்தாராம் ஆனால் அதன் பிறகு சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால் பிறகு அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகிக் கொண்டாராம் அதன் பிறகு தான் நயன்தாரா அந்த திரைப்படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார்.

அஜித் விஜய் கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சிம்ரனுக்கு ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்தின் மூலம் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.