தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை கொடி கட்டி பறந்தவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் புத்திசாலித்தனம் இல்லாததாலும் தாங்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துக்களை ஏமாந்து இறந்துள்ளார்கள் அவர்கள் யார் என்பதை பார்ப்போம்.
நடிகை பானுப்பிரியா
இவர் சினிமாவில் மிகவும் கடினப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியாக பராமரிக்காததால் பல கோடிகளை இழந்துவிட்டார்.
காஞ்சனா
நடிகை காஞ்சனா முதன்முதலில் விமான பெண்ணாக தான் வேலை பார்த்து வந்தார் அதன் பிறகு சினிமாவில் நடிகையாகி எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்து வந்தார் சிலரால் ஏமாற்றப்பட்டு தன் சொத்துக்களை இழந்த பிறகு வறுமையாலும் கோவிலில் வேலை செய்தார் அதன்பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது சொத்து அனைத்தையும் மீட்டுத் திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டார்.
நடிகை நமீதா
நடிகை நமிதா தமிழ் சினிமாவில் நடித்த பொழுது சில நம்பிக்கை துரோகத்தால் தன் சொத்துக்களில் சில கோடிகளை இழந்த பிறகு ரியல் எஸ்டேட்டில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து நஷ்டம் அடைந்தார். அதன் பிறகு மீதமுள்ள சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
சாவித்திரி
தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் என்று கொண்டாடப்படுபவர் தான் சாவித்திரி இவர் தன்னுடைய கடைசி காலத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் வறுமையில் வாடியதுடன் ஒரு வருடம் படுக்கையில் நோயாளியாக இருந்து உயிரை பிரிந்துவட்டார், இவரும் பல கோடி சொத்துக்களை இழந்தவர் தான்.
சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா தமிழில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தவர் இவர் நடித்த பொழுது பல கோடி சொத்துக்களை சம்பாதித்தார் ஆனால் சொந்தமாக படம் எடுத்து நஷ்டமாகி அனைத்து சொத்துகளையும் இழந்து தற்கொலை செய்துகொண்டார்.
விஜி
கோழி கூவுது என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் விஜி இவருக்கு தவறான ஆபரேஷன் செய்து அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனையில் மாத்திரை மருந்து என தன் பணத்தை முழுவதும் இழந்து காதல் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவித்யா
ஸ்ரீவித்யா தான் நடிக்கும் பொழுது இரவு பகல் பாராமல் சம்பாதித்த அனைத்து பணத்தையும் சொத்துக்களையும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் மொத்தத்தையும் இழந்தார்.