தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கியமான நடிகர் தான் விஜய் ஆண்டனி. சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் அமையும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் கடைசியாக இவருடைய நடிப்பிற்கு பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் படத்தில் நடித்து பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாமல் இருந்து வரும் ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
ஆத்மிகா: நடிகை ஆத்மிகா விஜய் ஆண்டனி உடன் இணைந்து கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் படும் தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்திற்குப் பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்பை கிடைக்கவில்லை.
மியா ஜார்ஜ்: வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வந்த மியா ஜார்ஜ் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து எமன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சுத்தமாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கேயும் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
நிவேதா பெத்துராஜ்: இவர் விஜய் ஆண்டனி உடன் சேர்ந்து திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இவருடைய நடிப்பு இந்த படத்தில் பாராட்டப்பட்டது இருந்தாலும் இந்த படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
அருந்ததி நாயர்: இவர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சைத்தான் படத்தில் நடித்திருந்தார் இதில் ஜெயலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருந்த நிலையில் ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சட்னா டைட்டஸ்: இவர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து பிச்சைக்காரன் படத்தில் செமையாக நடித்திருந்திருப்பார் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.