லைப் டைம் செட்டில் ஆக வெளிநாட்டு மாப்பிலையை திருமணம் செய்துகொண்ட நடிகைகள்.! அட லிஸ்டில் இந்த நடிகையும் இருக்கிறாரா??

acterss

சினிமாவில் பல நடிகைகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவார்கள். அந்த வகையில் சினிமாவில் கலக்கி வந்த கொண்டிருந்த பல நடிகைகள் திடீரென்று வெளிநாட்டு நபர்களை திருமணம் செய்துகொண்டு சினிமாவின் பக்கம் தலை காட்டாமல் செட்டிலாகிவிடுவார்கள்.

அந்த வகையில் எந்தெந்த நடிகைகள் வெளிநாட்டு நபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடுவார்கள் என்ற லிஸ்ட்டை தற்போது காண்போம்.

ஸ்ரேயா சரண்: ஸ்ரேயா சரண் ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அந்தவகையில் பாலிவுட், கோலிவுட் என்ற இரண்டிலுமே இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்தது. இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென்று ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்ட்ரி கொஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.தற்பொழுது ஸ்ரேயா சரண் சினிமா பக்கம் தலை காட்டாமல் ரஷ்யாவிலேயே செட்டிலாகிவிட்டார்.

sherya-family
sherya-family

பிரியங்கா சோப்ரா: நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகை ஆவார். இவர் முதன்முதலில் தமிழன் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தான் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு அமெரிக்காவை சேர்ந்த நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

priyanka-chopra-family

மாதவி : இவர் புதிய தோரணங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம்  போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் சினிமாவிற்கு அறிமுகமான 17 வருடங்களிலேயே சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிறகு 1996ஆம் ஆண்டு ரால்ப் சர்மா என்ற வெளிநாட்டு  நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

mathavi-family

ப்ரீத்தி ஜிந்தா: தமிழ் சினிமாவில்  உயிரே உனக்காக திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த தக்க தைய தையா பாடல் ரசிகர்கள் மனதில் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரீத்தி ஜிந்தா. இப்படம் ஹிந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படமாகும். இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.  பிறகு ப்ரீத்தி ஜிந்தா வெளிநாட்டை சேர்ந்த Gene goodenough என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

prithigintha

ராதிகா ஆப்தே: இவர் தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து இவர் தனது சிறந்த நடிப்பின் காரணமாக இந்தி, பெங்காலி,மராத்தி,தெலுங்கு,தமிழ்,மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.2012ஆம் ஆண்டு Benedict Taylor என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

rathika-apde-family