சினிமாத்துறை பொறுத்தவரை நடிகர்கள் தொடர்ந்து கதாநாயகர்களாகவே நடித்து வருகின்றனர். ஆனால் நடிகைகள் 30 வயதை தாண்டினார்கள் என்றால் அவர்கள் கதாநாயகிக்கு லாய்க்கு இல்லை என்று அம்மா அண்ணி கதாபாத்திரங்களுக்கு நடிக்க வைக்கிறார்கள். ஆனால் மூத்த நடிகர்கள் இளம் நடிகையுடன் ஜோடி போட்டு நடித்து அவர்களுடன் டூயட் பாடுவது வழக்கம் தான் ஆனால் தற்போது அது கிடையாது என்று கூறி வருகின்றனர்.
அதாவது 30 மற்றும் 40 வயதை தாண்டிய நடிகைகளும் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு போட்டியாகவே கதாநாயகிகளாக நடிக்கின்றனர் என்றனர். அது மட்டுமல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தனித்துவம் காட்டி வருகின்றனர். அப்படி 30 வயது தாண்டியும் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
ஜோதிகா:- 44 வயது உடைய நடிகை ஜோதிகா 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக் பார்ட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, போன்ற படங்களில் நடித்துள்ளார். அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி தந்தது. தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.
46 வயதை எட்டிய மீனா த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு நடிகை மீனா அவர்கள் தொடர்ந்து மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து தமிழிலும் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் மேலும் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து கலங்கினார். அதைத் தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் விஜய் நடிக்க போகும் அடுத்த படங்களில் நாயகியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியார் இப்போது அஜித்துடன் இணைந்த துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொன்களில் ரிலீஸ் ஆக உள்ளது. அதனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கலக்கியுள்ளார் அதனை தொடர்ந்து ஹிந்தியிலும் கலக்கிக் கொண்டு வருகிறார்.
மேலும் நடிகை அனுஷ்கா செட்டி தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் திருமணம் ஆகி விவாகரத்துக்கான 35 வயது நடிகை சமந்தா அவர்கள் தற்போது சகுந்தலம், குஷி, யசோதா, ஆகிய திரைப்படங்களில் பிசியாக உள்ளார். இந்த நிலை நடிகை சமந்தா தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகை தமன்னா அவர்கள் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் 32 வயது நெருங்கிய இவர் இன்னும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதைத் தொடர்ந்து திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற 31 வயது ஆகிய நடிகை அமலாபால் ஐந்து படங்கள் நடித்து வருகிறார்.