திரை உலகில் நடிக்கும் நடிகைகளின் நிஜ வாழ்க்கையை பார்த்தால் நமக்கே தலைசுற்றி போகும் இந்த அளவிற்கு நடிகைகள் கணவர்மார்களை மாற்றிக் கொண்டே இருந்துள்ளனர் குறிப்பாக ரஜினி உடன் நடித்த நடிகைகள் பலரும் இரண்டு, மூன்று கல்யாணம் வரை போய் உள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
நடிகை ஜெயசுதா : ரஜினி நடிப்பில் உருவான பாண்டியன் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அக்காவாக நடித்திருந்தார். இவர் முதலாவதாக வடே ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிய அதன் பிறகு நிதின் கபூர் என்ற அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த நிலையில் ஜெயசுதா வெளிநாட்டை நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையதள பக்கங்களில் தகவல்கள் கசிந்தன.
நடிகை ராதிகா :ரஜினி உடன் ஊர் காவலன் படத்தில் நடித்திருந்தார் இவர் முதலில் நடிகர் பிரதாப் போதனை திருமணம் செய்து கொண்டார் பின் வெளிநாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டார் விவாகரத்து பெற்று தற்பொழுது சரத்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை லட்சுமி : ரஜினியின் பொல்லாதவன், ராகவேந்திரா போன்ற படங்களில் நடித்த லட்சுமி சிறு இடைவெளிக்கு பிறகு படையப்பா படத்தில் ரஜினிக்கு தாயாக நடித்திருப்பார் இப்படிப்பட்ட லட்சுமி முதலில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின்னர் நடிகர் மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு விவாகரத்து பெற்று முடிய நடிகர் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.