குண்டாக மாறி பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி ஆன்ட்டி போல் மாறிய நடிகைகள்.! லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே

actress
actress

சினிமாவை பொருத்தவரை கடின உழைப்பு ரொம்பவும் அவசியம் கிட்டத்தட்ட சினிமா ஆரம்பித்த காலத்தில் சினிமாவில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திறமைக்காகவும் உழைப்பிற்காகவும் பல நடிகைகள் சினிமாவில் நிலைத்து நின்றனர் ஆனால் தற்போது அப்படி கிடையாது அழகும் உடல் சேஃபும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் இல்லை என்றால் ஹீரோயினிகாண வாய்ப்பு குறைந்து குணச்சித்திர வேடங்களில் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது அப்படி உடல் எடை அதிகரித்து சினிமா வாய்ப்பை இழந்த நடிகைகளை பற்றி தான் திறப்பது நாம் பார்க்க இருக்கிறோம்.

கிரண் :-  நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கிரண் முதல் படத்திலேயே கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருந்தார். அதன் பிறகு வின்னர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் நேரத்தில் நடிகை கிரண் அவர்கள் கொஞ்சம் எடை அதிகரித்து விட்டார் இதனால் நடிகை கிரணுக்கு ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு மற்றும் கிளாமர் ரோல் என ரூட்டை மாற்றி பின்னர் எந்த வாய்ப்புகளும் இல்லாமல் தற்போது சும்மாவே இருந்து வருகிறார்.

நமீதா :- கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நமீதா வசீகரமான முகபாவனையுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை நமீதா கூரிய காலத்திலேயே அதிக எடை ஏறிவிட்டார் இதனால் நடிகை நமீதாவிற்கு கிளாமர் ரோல் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

லட்சுமிமேனன்:- நடிகர் இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட சசிகுமாரின் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை லட்சுமிமேனன். முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த லட்சுமிமேனன் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தார் சில வருடங்களிலேயே உடல் எடை ஏறி தற்போது பட வாய்ப்புகளை இழந்துள்ளார்.

மும்தாஜ்:- கோலிவுட் ஹீரோயின் ஆக அறிமுகமான மும்தாஜ் தன்னுடைய  முதல் படத்திலேயே ஓவர் கிளாமர் காட்டியதால் சினிமாவில் முழு நேர கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார். ஆனால் அதன் பிறகு அதிக வெயிட் போட்டதால் மும்தாஜ்க்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டது.

சோனியா அகர்வால்:- தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால் அதன் பிறகு 7g ரெயின்போ காலனி போன்ற அடுத்த அடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். பின்னர் தளபதி விஜயின் நடிப்பில் வெளியான மதுர என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை சோனியா அகர்வால் இந்த படத்தில் கொஞ்சம் எடை கூடி இருந்ததால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போனது. தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார் நடிகை சோனியா அகர்வால்.

நித்யா மேனன் :- நடிகை நித்யா மேனன் ஓகே கண்மணி திரைப்பட சமயத்தில் சினிமா ரசிகர்கள் இவர் மீது ஒரு மிகப்பெரிய க்ரஷ் இருந்தது. நல்ல நடிப்பு திறமை இருந்தும் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் சரியாக அவருக்கு அமையவில்லை. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை நித்யா மேனனுக்கு தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.