சமீப காலமாக சினிமாவில் பயணித்து வரும் நடிகைகள் பலரும் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்களே ஆவார்கள். அந்த வகையில் மாடலிங் துறையில் தனது அழகு மற்றும் திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த். பின்பு வெள்ளித்திரையில் கவலை வேண்டாம், துருவ நட்சத்திரம் போன்ற ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து.
பின்பு அதன் மூலம் ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் ஹீரோயினாக தனது கவர்ச்சியை தாராளமாக வெளிப்படுத்தி கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வந்தவர் யாஷிகா. மேலும் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு குட்டையான டிரஸை போட்டுக் கொண்டு இளசுகளை தன்பக்கம் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேறு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகிறார் யாஷிகா ஆனந்த். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் ரசிகர்களுக்காக கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அள்ளி தெளித்து வந்த வண்ணம் இருந்தார் ஆனால் சமீபத்தில் இவரது வாழ்வில் பெரும் சோகம் ஏற்பட்டது.
அந்த வகையில் இவரது தோழியுடன் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த கார் விபத்துக்குள்ளானது. அதில் யாஷிகாவின் நெருங்கிய தோழி ஒருவர் இறந்த நிலையில் யாஷிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில்தான் அவர் உடல்நிலை முழுவதும் குணமடைந்து வீடு திரும்பிய..
நிலையில் மீண்டும் பழையபடி சோசியல் மீடியாவில் புகைப்படக்களை அதிகம் பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் தம்மாத்தூண்டு ட்ரெஸை போட்டுக் கொண்டு செம ஸ்டைலாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.