நடிகை யாஷிகா ஆனந்த் மாடலிங் துறையில் உள்ளே நுழைந்து பின் ஒரு சமயத்தில் பட வாய்ப்பை கைப்பற்றி தொடர்ந்து படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டார். முதலில் யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்தில் சின்ன சீன்களில் வந்து போனாலும்..
அதன் பிறகு இவர் நடித்த ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் மேலும் வாய்ப்புகளும் குவிய தொடங்கியது ஆனால் நடிகை யாஷிகா நடிப்பில் தொடர்ந்து கிளாமர் படங்கள் மட்டுமே வந்ததால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் உங்களுக்கு இது மட்டும் தான் வருமா என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
இதற்கு மேல் சினிமாவில் இப்படி ஓடினால் தனக்கான வாய்ப்பு குறையும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டும் விதமான படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் கடமையை செய், சல்பர், பகிரா, இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம் மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களிலும் கமிட்டாகி உள்ளார்.
இப்படி ஓடினாலும் நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்களை கவர்ந்திழும் வகையில் அவ்வபோது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவரது நெருங்கிய தோழியான பாவனிவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையதள பக்கத்தில் வெளியிட்டு பதிவுகளையும் போட்டுள்ளார்.
அதில் அவர் சொல்லி உள்ளது எங்களின் முழுமையற்ற காதல் மீண்டும் சந்திக்கும் வரை மிஸ் யூ பூ எப்பொழுதும் என் பிராத்தனைகளிலும் எண்ணங்களிலும் நினைவுகளிலும் நீ தான் என கூறி உள்ளார். யாஷிகா தனது தோழியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி பேசிவிட்டு ஒரு நல்ல போட்டோவை எடுத்துக் கொள்ளவில்லையா இப்படி ஒரு போட்டோவை தான் போட வேண்டுமா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.