தமிழ் சினிமாவில் கவலைவேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்கள் மூலம் சின்ன சின்ன ரோல்களில் வந்து சென்றவர் யாஷிகா ஆனந்த். பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் ஆவார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வளம் வந்து இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார். அந்த வகையில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். மேலும் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும்.
இப்படி திரைப்படங்கள் சமூக வலைதளங்கள் என அனைத்திலும் தனது கவர்ச்சியின் மூலம் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த் பின்பு இருட்டு அறையில் முரட்டு குத்து, கடமையை செய், நோட்டா, போன்ற சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அவரது தோழியுடன் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த கார் விபத்துக்குள்ளானது.
மேலும் அதில் இருந்த யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். யாஷிகாவும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு அண்மையில் தான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய உடனடியாக பிக் பாஸ் சீசன் 5 யில் யாஷிகாவின் நண்பன் நிரூப் இருந்ததையடுத்து அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.
தற்போது யாஷிகா அவரது படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு உள்ளார் அவர் கடற்கரையில் வெள்ளை நிற உடையில் காத்து வாங்கும் சில புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.