ஷூட்டிங் ஸ்பாட்டில் மினரல் வாட்டர் இல்லாததால் பாதியிலேயே ஓடிய நடிகை.!

thiyakarajan

சினிமா உலகில் ஒரு சில நடிகைகள் உச்ச நட்சத்திரமாக மாறிய பின் அடக்கி வாசிப்பார் ஆனால் ஒரு சில புதுமுக நடிகைகள் எடுத்த உடனேயே ஓவராக சீன் போடுவது வழக்கம் அப்படி ஒரு நடிகையை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம்.

நடிகரும், இயக்குனருமான பிரபலம் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அவர்கள் பிரபல நடிகை ஒருவரை பற்றி பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது : தென்னவன் படத்தை இயக்கிய இயக்குனர் நந்தா குமார் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் நடிகை நிலா நடிப்பில் உருவான திரைப்படம் ஜாம்பவான்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற சமயம் அந்த படத்தில் ஒரு பாடல் காட்சி ஒன்றில் பிரசாந்த் மற்றும் நிலா ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டியில் குளிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதற்கு நடிகை நிலா ஸ்கின் அலர்ஜி இருப்பதால் தொட்டியில் மினரல் வாட்டர் ஊற்றுங்கள்.

அப்பொழுது தான் நடிப்பேன் என கூறியிருந்தார் ஆனால் படப்பிடிப்பு கிராமத்து பக்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.மேலும் அங்கு வாட்டர் சப்ளை மற்றும் பட்ஜெட் போன்றவை எதுவும் அதற்காக ஒதுக்கப்படவில்லை இதனால் தண்ணீரிலேயே நடிக்க சொல்லி கேட்டோம் என படக்குழு முயற்சித்தது.

nila
nila

இதை எதையும் காது கொடுத்து கேட்காமல் நிலா சுவர் ஏறி குதித்து பிளைட் பிடித்து மும்பை சென்றுவிட்டார் அதன் பிறகு மும்பையில் அவரை சந்தித்து சமாதான படுத்தி வெளிநாட்டில் வைத்து அந்த பாடலை எடுத்து முடித்தார்கள்.