13 வயதிலேயே விஜய் படத்தில் மாடர்ன்னாக நடித்த நடிகை – யார் அது தெரியுமா?

friend
friend

சினிமா உலகில் ஒரு ஹீரோ படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்தால் அந்தப்படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றிப்படமாக மாறுவது உண்டு அந்த வகையில் விஜய் சூர்யா நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி சென்டிமென்ட் கலந்த படமாக..

இருந்ததால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் அடித்து நொறுக்கியது. இந்த படத்தில் விஜய் சூர்யாவுடன் இணைந்து தேவயானி, வாடிவேலு, ரமேஷ் கண்ணா, ராதாரவி மற்றும் பலர் நடித்து அசத்தி இருந்தனர்.

இவர்களுடன் இணைந்து வில்லி மற்றும் கிளாமர் கதாபாத்திரத்தில் அபிநயா என்ற இளம்பெண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இந்த பெண் தேவயானி வீட்டில் அவரது தங்கை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அபிநயா இந்த படத்தில் எப்படி நடித்தார் என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

அபிநயா இந்த படத்தில் நடிக்கும்போது அவரது வயது 13 என கூறப்படுகிறது.  அபிநயா பிரெண்ட்ஷிப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் பக்கத்தில் டெக்னிசியன் ஒருவர் ஆபீஸ் வைத்திருந்தாராம் அப்போது  தார் ரோட்டில் தான் அபிநயா விளையாடி கொண்டிருந்தாராம். ஃப்ரெண்ட்ஷிப் படக்குழு.

அந்த இடத்திற்கு வந்த பொழுது அபிநயா விளையாடிக் கொண்டிருந்தார் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் பிரண்ட்ஸ் படத்தில் நடிக்க வைத்து விடலாம் என படக்குழு யோசித்து அதனை அடுத்து அபிநயாவின் அம்மாவிடம் போய் கேட்டுள்ளனர் அதற்கு அவருக்கு இப்போது படிப்பு தான் முக்கியம் என கூறி உள்ளார்.

ஆனால் அபிநயாவுக்கு 13 வயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாம் அதனால் அந்தப் பெண்ணின் ஆசைக்கு இணங்க படத்தில் நடிக்க வைத்து அசத்தியது. 13 வயதில் நடித்த அந்த நடிகை அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடையவில்லை ஆனால் பதினெட்டு இருபது வயதில் நான் சினிமாவுலகில் வந்து இருந்தால் தற்போது ஹீரோயினாக வலம் வந்து இருப்பேன் என கூறி வருத்தப்பட்டுள்ளார்.