காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருந்தார்.
மேலும் இவர் 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகியிருக்கிறார். அப்படி அவர் இருந்தாலும் இவருடைய காமெடிகள் தான் நெட்டிசன்களுக்கு தீனி போட்டு வருகிறது. யாரை ட்ரோல் செய்ய வேண்டும் என்றாலும் இவரின் காமெடியை வைத்துதான் ட்ரோல் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர் நெடிசன்கள்.
அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு இவரின் காமெடி என்றால் பிடிக்கும். இந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு இவருக்கு யாரும் பட வாய்ப்பு தரவில்லை என பொது மேடையில் அழுது புலம்பியதாக இணையதளத்தில் செய்தி பரவியது.
இதனை அறிந்த பிக்பாஸ் பிரபலமான சர்ச்சை நாயகி மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அந்த அழைப்பில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து அவர் வியந்ததாக கூறி இருந்தார்.
இவர் தயாரிக்கும் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடிக்க வடிவேலுவை அழைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
For You Sir 😊 #actor #Vadivelu pic.twitter.com/BhAk9dXrVZ
— Thamizh Selvi Mani (@meera_mitun) February 21, 2021