actress varsha bollamma latest movie poster: தமிழ் சினிமாவில் தளபதி யை வைத்து பிரபல இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் அட்லீ இவர் இயக்கும் திரைப்படத்தில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தாலும் படம் எப்படியோ ஹிட் அடித்து விடுகிறது.
அந்த வகையில் தளபதியை வைத்து கடந்த 2019ஆம் ஆண்டு பிகில் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது 200 கோடி வசூலை ஐந்தே நாட்களில் பெற்றது மட்டுமல்லாமல் ப்ளாக் பஸ்டர் இடம் பெற்றுவிட்டது.
இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்தது மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்துள்ளார்கள்.
பிகில் திரைபடத்தில் ஐயர் வீட்டு பெண்ணாக நடித்த நடிகைதான் வர்ஷா பொல்லம்மா இவருக்கு இந்த திரைப்படத்தில் கொடுத்த கதாபாத்திரம் ஆனது மிக சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்களின் மனதில் இவருடைய கதாபாத்திரம் மிக ஆழமாக பதிந்து விட்டது.
நமது நடிகை திரை உலகில் முதன்முதலாக சதுரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் முகம் காட்ட ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படவில்லை பின்னர் வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
என்னதான் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தான் நமது நடிகை ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் மாணவியாக நடித்த நமது நடிகை ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார்.
இந்நிலையில் தெலுங்கில் stand-up rahul என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் தற்சமயம் வெளியாகி உள்ளது அதில் நமது நடிகை சோடாபுட்டி கண்ணாடி மற்றும் பற்களில் கிளிப் என காமெடி நடிகை போல உள்ளார் இதனால் இப்புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.