Actress Varalaxmi Sarathkumar: தனது அப்பா சினிமாவில் பிரபல நடிகர் என்றாலும் அவருடைய உதவி இல்லாமல் தனது முயற்சியினால் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகைகளின் ஒருவராக கலக்கி வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றவர்.
அந்த வகையில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தாலும் கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் அனைத்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி இவருடைய வில்லி கேரக்டர் தான் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
மிகவும் குண்டாக இருந்த வரலட்சுமி தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக இருந்து வருகிறார். அப்படி இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக ரசிகர்களும் வரலட்சுமி இது என ஷாக்காகி வருகின்றனர். பிரபல முன்னணி நடிகர் சரத்குமாரின் மகள்தான் வரலட்சுமி.
அதாவது, நடிகர் சரத்குமார் சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு பிறந்தவர் தான் வரலட்சுமி. சில கருத்து வேறுபாடு காரணமாக சரத்குமார் சாயாதேவி விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுடைய விவாகரத்தின் பொழுது நடிகை வரலட்சுமி மிகவும் சிறு வயது குழந்தை.
இந்நிலையில் சரத்குமார் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வரலட்சுமி சரத்குமாரின் உதவி இல்லாமல் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். சாயாதேவி பேட்டி ஒன்றில் சரத்குமார் உடன் விவாகரத்து பெற்று பிரியும் பொழுது வரலட்சுமி சிறு குழந்தையாக இருந்தார். அவரிடம் அப்பாவா வேண்டுமா அம்மாவா என கேட்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
விவாகரத்து செய்த பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் நானும் பிரச்சனைகளை சந்தித்தேன். எனவே தற்பொழுது சேவ் சக்தி அறக்கட்டளை மூலம் பல பெண்களுக்கு உதவி செய்து வருவதாக கூறி இருக்கிறார். மேலும் இந்த அறக்கட்டாயை தனது மகள் வரலட்சுமி தான் துவங்கியதாகவும் கூறியிருக்கும் நிலையில் வரலட்சுமி உடன் இருக்கும் அவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.