ஒரு படம் வெற்றி, தோல்வின்னு சொல்றதுக்கு இவங்க யாரு? என ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட பிரபல தமிழ் நடிகை.!

bayilvan-ranganathan
bayilvan-ranganathan

சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலும் ரசிகர்கள் அனைவரும் நேரடியாக திரையரங்குக்கு சென்று அங்கு திரைப்படங்களை பார்த்துவிட்டு அதன் பிறகு தான் அதனுடைய விமர்சனத்தை தெரிந்து கொள்வார்கள் ஆனால் தற்பொழுதெல்லாம் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் முதலில் யூட்யூப் சேனல்களில் விமர்சனத்தை பார்த்து தெரிந்து கொண்டு அதன் பிறகு படங்கள் பார்ப்பதை விரும்பி வருகின்றனர்.

அந்த அளவிற்கு சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும் சில யூடியூப் சேனல் தொடர்ந்து அனைத்து திரைப்படங்களையும் விமர்சனம் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதில் முக்கியமாக ஒரு சில சேனல்கள் அந்த படம் நன்றாக இருந்தாலும் கூட அதனைப் பற்றிய தவறான விமர்சனத்தை தந்து வருகிறது எனவே பலரும் அந்த விமர்சகரின் மேல் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் விமர்சகர்கள் ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் தான். கடுமையான விமர்சனங்களை தந்து வரும் இவர்கள் இருவர் மேலும் சினிமா வட்டாரங்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் கன்னடத்தில் காராலா ராத்திரி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான கொன்றால் பாவம் என்ற பெயரிட்ட படத்தில் நடித்துள்ளார் இதில் குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இவ்வாறு கொன்றால் பாவம் படம் இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு படக்குழுவினர்கள் பேட்டி அளித்தனர். அதில் பேசிய வரலட்சுமி சரத்குமார் சினிமா விமர்சனங்களை கிழித்து தொங்க விட்டு உள்ளனர். அதாவது ஒரு படம் வெளியான பின்பு 5, 6 நாட்கள் கழித்து விமர்சனம் சொல்லலாம். ஆனால் படம் வெளியான உடனே அதனை பற்றி மோசமான விமர்சனங்களை கூறி அந்த படத்தினை ஓட விடாமல் செய்து வருகிறார்கள்.

ஒரு படம் உருவாக பலரின் கடின உழைப்பு இருந்து வருகிறது எனவே ஒரு படம் ஹிட் பிளாப் என்று சொல்வதற்கு அவர்கள் யார்? 10 பேரு படத்தை பார்த்தால் எட்டு பேருக்கு பிடிக்கும் இரண்டு பேருக்கு பிடிக்காது. அப்படி இருக்கையில் உங்களுடைய கருத்துக்களை பரப்பி படத்தை ஓட விடாமல் செய்வது மிகவும் தவறான ஒன்று இதனால் பல படங்களுக்கு நஷ்டங்கள் ஏற்பட்டு வருகிறது என ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்களை வரலட்சுமி மறைமுகமாக பேசியுள்ளார்.