தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பதால் சினிமா உலகில் எடுத்த உடனையே டாப் நடிகர்களும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் முதலில் சிம்புவின் போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார்.
முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், விஷால், விஜய் சேதுபதி, சசிகுமார், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்ந்து கொண்டார்.
ஒரு கட்டத்தில் இவருக்கு சோலோ படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிலேயும் தொடர்ந்து வெற்றியை கொடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறார். இருபின்னும் ரசிகர்கள் இவரை விமர்சித்தனர். காரணம் வரலட்சுமி சரத்குமார் சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் அவரை கிண்டலின் கேலியும் செய்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் அண்மைக்காலமாக உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தினார் ஒரு வழியாக தற்போது 18 கிலோ உடல் எடையை குறைத்து செம சூப்பராக மாறி இருக்கிறார். இப்பொழுது பட வாய்ப்புகளும் அதிகம் குவிந்து உள்ளது அந்த வகையில் தற்போது இவரது கையில் hanu man, veera simha reddy, லாபம், பிறந்தால் பராசக்தி..
மற்றும் ஒரு சில புதிய படங்களிலும் கமிட் ஆகிய நடித்து வருகிறார். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமார் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் செம்ம மாஸாக இருக்கிறார் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்கள் பாருங்கள்.