“சர்க்கார்” படத்தில் வில்லியாக நடித்ததற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் – வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

varalaxmi
varalaxmi

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஒரு வாரிசு நடிகையாக இருந்தாலும் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். முதலில் சிம்புவுடன் கைகொடுத்து போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சத்யா போன்ற பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் ஒரு கட்டத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் வில்லி கதாபாத்திரங்கள்  தனது திறமையை வெளிக்காட்டி நடித்து அசத்தினார் அந்த வகையில் சண்டக்கோழி 2,  சர்க்கார் போன்ற படங்களிலும் தனது திறமையை வெளிக் காட்டி அசத்தினார்.

இதனால் தென்னிந்திய சினிமா உலகில் ஹீரோயினாகவும்,  வில்லியாகவும் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். சினிமா உலகில் வெற்றி கொடியை நாட்டினாலும் அவ்வப்போது டைட்டான மற்றும் ஆடை அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தன் கண்ட்ரோலில் வைத்து வருகிறார்.

அதனால் இவருக்கு ரசிகர்களும் ஏராளமாக இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் சர்க்கார் இந்த படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து உருவாகி இருந்தது சர்க்கார் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக வரலட்சுமி சரத்குமார் நடித்து அசத்தி இருந்தார்.

இந்த படம் அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது இந்த நிலையில் இந்த படத்தில் அவர் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது அதன்படி பார்த்தால் சார்கார் திரைப்படத்திற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் சுமார் 50 லட்சம் சம்பளம் வாங்கிய தகவல்கள் வெளிவருகின்றன.