தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்ட நடிகை வரலட்சுமி.! இவருக்கு திருமணமாகி விட்டதா குழப்பத்தில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

பொதுவாக ஒரு நடிகை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அந்த நடிகை ஹீரோயின் கதாபாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது உள்ள முன்னணி நடிகைகளை விடவும் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வரலட்சுமி.  இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதோடு மற்ற நடிகைகளை விடவும் மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகையும் வரலக்ஷ்மி தான். ஏனென்றால் இவர் கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லி, துணை நடிகை போன்றவற்றிலும் நடித்து வருகிறார்.

இது குறித்து இவரிடம் கேட்கும்பொழுது முக்கியமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க அத்திரைப்படத்தின் கதையையும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருந்தால் எந்த கேரக்டரில் வேணாலும் நடிக்கலாம் ஹீரோயின் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த ஒரு காரணத்தினாலேயே ரசிகர்கள் வரலட்சுமியை அதிகம் விரும்புகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர் காட்டேரி,  பாம்பன்,  பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் லாகம் என்ற கன்னட படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் தனது நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் எனது மகன் என்று பதிவிட்டு இருந்ததால் முதலில் ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கூறி வந்தார்கள். அதன் பிறகுதான் தெரியவந்தது அந்த நாயை தான் தனது மகனாக கூறுகிறார் என்று இதோ அந்த வீடியோ.