பாலிவுட் நடிகருடன் செம மாசான திரில்லர் திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி..! இணையத்தை மிரட்டும் தத்வமசி போஸ்டர்..!

varalakshmi-01
varalakshmi-01

தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் திரைப்படம் தான் தத்வமசி இவ்வாறு இந்த திரைப்படத்தில் எழுத்தாளராக ரமணா கோபிசெட்டி இயக்குனராக  பணியாற்ற உள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஆனது மிக பயங்கரமான திரில்லர் திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷால் மற்றும் கதாநாயகியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது.

ஆனால் இத் திரைப்படத்தின் டைட்டில் மட்டும் சிலருக்கு புரியாமலே இருந்து வருகிறது அதற்கான அர்த்தம் என்னவென்றால் தத்வமசி என்பது ஒரு சமஸ்கிருத மந்திரம் இவை உபநிஷதங்களை சேர்ந்த மகாகவியில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் லோகோ அனைத்தும் சிவப்பு நிறத்தில் மிக மோசமாக ஜாதக கட்டத்துடன் காட்டப்பட்டுள்ளது. இதனைப் பார்த்தால் இத் திரைப்படமானது ஒரு ஆன்மீக ரீதியாக உருவாகும் திரைப்படமாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறிவிடுகிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகளுக்கு பயிற்சியாளராக முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் அவர்களை  நியமனம் செய்துள்ளார்கள்.

பொதுவாக வரலட்சுமி தான் நடிக்கும் திரைப்படத்தில்  எப்பொழுதும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் அதுமட்டுமில்லாமல் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் தன்னையே மாற்றிக் கொள்வார். ஆகையால் இத்திரைப்படத்தில் அவருடைய நடிப்பு மற்றும் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

varalakshmi-1
varalakshmi-1

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டுள்ளது.