காற்று கூட புக முடியாத அளவிற்கு இளம் நடிகரை இறுக்கி அணைத்தபடி பிறந்தநாள் வாழ்த்து கூறிய வரலட்சுமி சரத்குமார்.!

பல நடிகர் நடிகைகள் வாரிசு நடிகைகளாக சினிமாவிற்கு அறிமுகமாகி சினிமாவில் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் தள்ளாடி வருகிறார்கள். அதிலும் அதிக திறமை உள்ள சில நடிகர், நடிகைகள் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சரத்குமாரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி.

இவர் மற்ற நடிகைகளை விடவும் கொஞ்சம் வித்தியாசமான நடிகை என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலர் மற்ற படத்தில் நடிகையாக மட்டுமே நடித்து வருவார்கள். ஆனால் வரலட்சுமி அப்படியெல்லாம் செய்யாமல் குணச்சித்திர நடிகை, துணை நடிகை என்று அனைத்து டைரக்டர்களிலும் நடித்து வருகிறார்.

அதைப்பற்றி அவரிடம் கேட்கும்பொழுது ஒருவர் நடிகையாக மட்டும் தான் அடிக்க வேண்டும் என்பது கிடையாது. படங்களில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிப்பது ஓகேதான் என்று கூறியிருந்தார். எனவே இதன் காரணமாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இவர் தமிழில் எப்படி பிரபலம் அடைந்துள்ளாரோ அதைவிடவும் தெலுங்கிலும் ஒரு டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில் வில்லியாகவும் பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக கிராக் திரைப்படம் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது இவர் ஒரு நடிகரை இறுக்கி அணைத்தபடி காற்று புகாத அளவுக்கு இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தீப் கிஷன் தனது பிறந்த நாளை சமிபத்தில் கொண்டாடினார்.

அந்த வகையில் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வரலட்சுமி சந்தீப் கிஷனை இருக்கி அணைத்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை கூறியிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மூச்சு கூட விட முடியாது போல என்று கூறி வருகிறார்கள்.