வனிதாவின் மகன் லியோ படத்திலா.! வைரலாகும் புகைப்படம்

Vanitha Son in Leo Movie

Vanitha Son in Leo Movie: நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ படத்தில் நடித்திருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது.

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருவதனால் கண்டிப்பாக லியோ வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. விஜய் நடிப்பில் சமீப காலங்களாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவே இதற்கு முன்பு லோகேஷ்-விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தமன்னா தொடையை காட்டியதால் தான் ஓடிச்சு.. ஜெயிலர் ஒரு மண்ணும் கிடையாது.. வம்பை விலைக்கு வாங்கும் லியோ பட நடிகர்.

அதேபோல லியோவும் இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர். ஆனால் முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாவது பாதி சொல்லும் அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் கலவை விமர்சனத்தை தந்து வருகின்றனர். இவ்வாறு லியோ படம் முதல் நாளில் 140 கோடிக்கு மேல் வசூல் வசூல் செய்திருக்கும் நிலையில் இனி வரும் நாட்கள் விடுமுறை என்பதனால் கண்டிப்பாக இதனை விட வசூல் டபுள் மடங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vanitha Son in Leo Movie
Vanitha Son in Leo Movie

இதனை அடுத்து தற்பொழுது லியோ படம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளரும், விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்த நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இரண்டு முறை கருகலைப்பு.. நண்பர்கள் கேட்ட கேள்வி.. விஜய் பட நடிகை சங்கவி வாழ்க்கையில் இத்தனை சோகங்களா..

கிளைமேக்ஸ் காட்சியில் சித்தப்பா அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில புகைப்படங்களை காண்பிப்பார் அதில் தனது மகனின் முதல் பிறந்த நாளின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை காண்பிப்பார். அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் ஸ்ரீஹரி என்பது குறிப்பிடத்தக்கது.