விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார். இவர் ஹீரோயின், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர்.
என்னதான் இவர் இதற்கு முன் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் பிரபலமாகவில்லை. இவர் பிக்பாஸில் கலந்து கொண்டதன் பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமானர்.
அதுமட்டுமல்லாமல் இவருக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் ஆன நிலையிலும் நான்காவதாக ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இதனால் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கினார். அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் அவரை விட்டுப் பிரிந்தார்.
அந்த சர்ச்சையில் இருந்து மீண்டு பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற ஷோவை தொகுத்து வழங்கி வந்தார். அதுமட்டுமல்லாமல் பிரபல அரசியல் வாதியான ஹரிநாடார் என்பவருடன் இணைந்து 2k அழகானது காதல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் ஐந்தாவதாக ஹரிநாடாரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் இதில் ஆச்சரியப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை என கூறி வருகின்றனர்.