பிரபல தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியலில் களமிறங்கும் நடிகை வனிதா..! கதை கந்தலாகி போச்சு..!

vanitha
vanitha

சமூக வலைத்தளப் பக்கத்தில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார் இவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை எவ்வாறு திரையுலகில் பிரபலமானார் என்றால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.

அதுமட்டுமில்லாமல் தற்போது அந்த பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் என்ற திரைப்படத்திலும் மேலும் பவர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும் பிக் அப் அண்ட் டிராப்  என்ற திரைப்படத்தில் அவரது ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

இவ்வாறு திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் வேளையில் சந்திரலேகா சீரியல் இவர் கெஸ்ட் ரோலில் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட சீரியல் ஒன்றில் நடிகை வனிதா வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திருமதி ஹிட்லர் என்ற சீரியல் தான்.

இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடிகை வனிதா கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளது சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.