இளம் நடிகர் உடன் டூயட் பாடப்போகும் நடிகை வனிதா..! இணையத்தில் வெளியானபுகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

vanitha-1
vanitha-1

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜயகுமார் இவருக்கு இரண்டு திருமணம் நடைபெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதில் இவருக்கு நான்கு பெண் வாரிசு ஒரு ஆண் வாரிசு உள்ளது.

அந்த வகையில் விஜயகுமார் வாரிசுகளில் மிகவும் பிரபலமான வாரிசு என்றால் அது அருண் விஜய் மற்றும் வனிதா ஆகிய இருவரும் தான் இதில் வனிதா திரைப்படங்களில் நடித்து பிரபலமான அதைவிட சர்ச்சையில் சிக்கிக் கொண்டு பிரபலமானது தான் அதிகம்.

அந்த வகையில் நமது நடிகை திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி வழியில் முகம் காட்டி உள்ளார்.

அந்த வகையில் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது மட்டுமில்லாமல் இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு  ரசிகர்களை பெருமளவு கவர்வார் என நம்பிய நிலையில் ஏமாற்றம் தான் மிச்சம்.

மேலும் நமது நடிகை சின்னத்திரையில் நடிப்பது மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ஒருசில திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் வனிதா தன்னுடைய அடுத்த திரைப்படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தில் ப்ரஜின் அவர்கள் ஹீரோவாக நடிக்க உள்ளாராம் இவர் ஏற்கனவே சின்னத்திரையில் பல்வேறு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் நடிகை வனிதா வெளியிட்டது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.