actress vanitha tatto latest update: ஒரு நேரத்தில் சமூகவலைதளத்தில் மிக வைரலாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் அது வனிதா மற்றும் பீட்டர் பால் திருமண விஷயம் தான். ஏனெனில் வனிதா தன்னுடைய இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய மூன்றாவது கணவரை தேடி சென்றதன் காரணமாம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது.
என்னதான் பல எதிர்ப்பு வந்தாலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தது மட்டுமல்லாமல் அடிக்கடி காரில் ஊர் சுற்றுவது மற்றும் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இணையதளத்தில் வெளியிடுவது போன்ற செயல்களை வழக்கமாக செய்து வந்தார்கள்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் வனிதாவும் பீட்டர்பாலும் பிரிந்துவிட்டதாக வனிதா சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பாகவே பீட்டர் பால் உடன் ஊர் சுற்றியது ரொமான்ஸ் செய்தது ஆகிய அனைத்தும் லவ் செலிபரேஷன் என கூறியுள்ளார். அப்பொழுது பீட்டர் பால் வனிதாவின் பெயரையும் வனிதா பீர்பாலின் பெயரையும் கையில் டாட்டூ போட்டிருந்தார்கள். இந்நிலையில் நடிகை வனிதா உடைய கையில் உள்ள பெயரை மாற்றியமைத்து டாட்டூ குத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் கையில் தற்போது டாட்டூவில் சைனிஸ் சிம்பல் இருப்பதாகவும் அதற்கு அர்த்தம் டபுள் ஹேப்பினஸ் என்றும் நடிகை வனிதா சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் போகி பண்டிகை தொடர்ந்து தன்னுடைய பழைய விஷயங்கள் அனைத்தையும் எறித்துவிட்டு சந்தோஷத்துடன் புதிதாக தனது வாழ்க்கையை தொடரப் போவதாகவும் வனிதா கூறியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய டாட்டூ பற்றிய வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளர் வனிதா அப்போது அவருடன் அவருடைய மகளும் இருந்துள்ளார் அப்போது அவருடைய மகள் இனிமேல் டாட்டூ போடுவியா என கேட்டுள்ளார் அதற்கு இனிமேல் எந்த ஒரு நாதாரியின் பெயரையும் போட மாட்டேன் என்று கூறியது மட்டுமல்லாமல் என்னுடைய வாழ்வில் இனிமே சந்தோஷம் தான் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் இப்படிப்பட்ட டாட்டூவை தற்போது போடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.