பொதுவாக சினிமாவைச் சேர்ந்த நடிகராக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் அவர்களின் மனசாட்சிக்கு உட்பட்டு முதல் திருமணத்தை மட்டும் செய்து கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள் ஆனால் தொடர்ந்து மூன்று நான்கு முறை திருமணம் செய்து கொண்டு தற்போது சிங்கிளாக வாழ்ந்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஒருவர்தான் வனிதா விஜயகுமார் இவர் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் இவர் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார் ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார்.
அதன்பிறகு நீண்ட காலங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இதன் மூலம் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர் அதோடு மீண்டும் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அந்த வகையில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பீட்டர் பால் ஒரு பயங்கரமான குடிகாரர் என்பதை அறிந்த வனிதா வீட்டைவிட்டு அவரைத் துரத்திவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் வனிதா கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஹனிமூனிற்காக மாலத்தீவு சென்று உள்ளார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தது.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் இது உண்மையான தகவல் அல்ல என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நான் சிங்கிள் மற்றும் அவைலபுள் அப்படியே இருக்கிறேன் இந்த பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அனிதாவைப் வறுத்தெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு நெட்டிசன் சிங்கிள் மட்டும் சொன்னால் போதாதா அது ஏன் அவைலபுள் அதை யார் வேணாலும் அப்புரோச் செய்யலாமா என்பது போல கூறி உள்ளார்.