சமீபத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார் இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டது சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் இந்த திருமணமும் விவாகரத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஒரு புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய தொழில் சம்பந்தப்பட்டமான புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் நடிகை வனிதா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருவது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்நிலையில் அடிக்கடி புது பேஷன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் வனிதா வின் பதிவிற்கு லைக் மற்றும் கமெண்டுகளும் வந்து கொண்டேதான் இருக்கிறது.
அந்த வகையில் தன்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை மறக்க முடியாமல் பிக்பாஸ் லோகோ உள்ள செயினை தன்னுடைய கழுத்தில் அணிந்து உள்ளார். அந்த வகையில் அந்த செயின் தெரியும் அளவிற்கு வித விதமான பொசிஷனில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு பிக்பாஸ் மீது அவ்வளவு லவ்வா என கேள்வி எழுப்பி உள்ளார்கள். மேலும் இதை தொடர்ந்து புதிய வகையான காதணிகளை அணிந்து கொண்டும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் நமது வனிதா.