தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பின்னாட்களில் திரையில் இருந்து காணாமல் போன நடிகை வனிதா. பின்னாட்களில் சின்னத்திரையில் இது நாட்கள் கழித்து காணப்பட்டார். இவரது அப்பா விஜயகுமார் தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வாயிலாக சினிமா உலகிற்கு வந்த வனிதா விஜயகுமார் அவர்கள் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்த இப்படத்தை தொடர்ந்து அவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு சினிமாவில் அவரால் நீடிக்க முடியவில்லை மேலும் தனது அப்பா ,அம்மாவுடன் தொடர்ந்து சண்டை போட்டு பின் வீட்டில் இருந்து சென்ற தனியாக சென்றார்.
தனியாக சென்ற இவர் இரண்டு திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்று மேலும் தனியாக வாழ்ந்து வந்தார் இப்படி போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் விஜய் தொலைக்காட்சி அவரை கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸல் போட்டியாளராக அழைத்தது அதனை ஏற்றுக்கொண்டு மீடியோ உலகிற்கு மீண்டும் வந்தார் வனிதா.
பிக் பாஸ்ஸில் மற்ற போட்டியாளர்களுடன் இவர் அடிக்கடி சண்டை இடுவது மற்றும் சர்சையான விஷயங்களை பேசியதால் இவர் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் வெறுப்புக்குரிய நபராகக் காணப்பட்டார் ஆனால் இதன் மூலம் விஜய் டிவி டிஆர்பி ரேட்டை ஏற்றுக்கொண்டது.
இவரை விட்டு விடக்கூடாது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட விஜய் டிவி இவரை மீண்டும் குக் வித் கோமாளி மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து தனது டிஆர்பி ரேட்டை அதிக படுத்தி கொண்டது.இப்படி ஒரு பக்கம் சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் திடீரென ஜூன் மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி அடைய செய்தார்.
வனிதா சமிப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார். அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் KPY செட்டில் கலந்து கொண்ட போது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.