பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இன்று மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது அந்தவகையில் இந்த தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான ஒரு சீரியல்தான் தெய்வமகள்.
இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை வாணி போஜன் நடித்திருந்தது மட்டுமில்லாமல் நாயகனாக கிருஷ்ணன் நடித்திருப்பார் இவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த இந்த சீரியல் ஆனது மாபெரும் வெற்றியை பெற்றது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு திரைப்படம் போலவே அமைந்தது.
இவ்வாறு இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் ஒரு தாசில்தாராக நடித்திருந்தது மட்டும் இல்லாமல் பல்வேறு பிரச்சனைகளையும் அவர் மிகச் சிறப்பாக கையாள்வதும் இந்த சீரியலில் அவருடைய நடிப்பையும் பார்த்து பலர் வியந்து போனது மட்டுமில்லாமல் அவரை கொண்டாடி வந்தார்கள்.
இதனால் வாணிபோஜனை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என பட்டம் கொடுத்து கௌரவித்தது மட்டுமில்லாமல் அவர் தற்போது வெள்ளித்திரையிலும் கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் அசோக்செல்வன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் கதநாயகியாக நடித்துள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை வாணிபோஜன் நடிப்பில் உருவாகும் லாக்கப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், சியான் 60 கிட்டதட்ட 6 திரைப்படங்களில் இவர் பிஸியாக இருந்து வருகிறார்.
என்னதான் இவர் பிஸியாக இருந்தாலும் தற்போது வரை சமூக வலைதள பக்கத்தில் புகைபடம் வெளியிடுவதை தவிர்த்ததே கிடையாது அந்த வகையில் சமீபத்தில் நடுகாட்டில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.