பட வாய்ப்புக்காக காதலனை கைகழுவிய நடிகை வாணி போஜன்..?

vani-bhojan-
vani-bhojan-

சினிமா உலகில் இடம் பிடிப்பது ரொம்ப அரிது ஆனால் அப்படி கிடைக்கும் வாய்ப்பை சாதாரணமாக விட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நடிகைகளும் தொடர்ந்து தனது திறமையை வெளிக்காட்டி ஓடுகின்றனர். அந்த வகையில் சின்ன திரையில் சூப்பராக பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை நயன்தாரா என பெயர் எடுத்தவர் வாணி போஜன்.

இவர் வெள்ளி திரையில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வெற்றி கண்டு வருகிறார். இந்த வருடத்தில் கூட குறைந்தது ஏழு எட்டு படங்கள் அவர் கைவசம் இருந்தன. தொடர்ந்து படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் ஆனால் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் கிடப்பிலேயே கிடைக்கின்றன.

மேலும் பல்வேறு படங்களிலும் வாணி போஜனை புக் செய்வதற்கு தயாரிப்பாளர்களும் தற்போது அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அண்மை காலமாக நடிகை வாணி போஜன் சினிமாவையும் தாண்டி காதல் மயக்கத்தில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. சர்ச்சைக்கு பெயர் போன ஜெய்யுடன் வாணி போஜன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.

வாணி போஜன் எங்கு போனாலும் ஜெய்யும் பின்தொடர்ந்து இருக்கிறாராம் கதை கேட்க போனாலும் கூட ஜெய் இருப்பதாக சொல்லப்படுகிறது இதனால் ஒரு சில இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பின்வந்து பார்க்கிறோம் என சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இதை உணர்ந்து கொண்ட வாணி போஜன் ஜெய்யுடன் இருப்பது..

நமக்கு நாமே சினிமா வாய்ப்பை அழித்து கொள்வது போல தோன்றுகிறது எனக் கூறி ஜெய்யுடன் இருந்த உறவை தற்போது முறித்துக் கொண்டு சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறாராம். அதுவும் குறிப்பாக முன்பு போல் இல்லாமல் சற்று கிளாமரான கதாபாத்திரங்களிலும் நடிக்க அவர் ரெடியாக இருக்கிறாராம் இதனால் தன்னை நம்பி வரும் வாய்ப்புகளை விட்டுவிடக் கூடாது என முடிவெடுத்துள்ளார் வாணி போஜன்.