தமிழ் சினிமாவில் வளர்ந்த ஒரு நடிகை வாணி போஜன். இவர் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை காட்டி வந்த இவர் வெள்ளித்திரையில் 2010 ஆம் ஆண்டு “ஓர் இரவு” என்னும் படத்தில் தலை காட்டினார்.
அதன் பிறகு அதிகாரம் 79 மற்றும் தெலுங்கு தலை காட்டி வந்தாலும் 2020 ஆம் ஆண்டு நடிகை வாணி போஜனுக்கு நல்ல ஆண்டாக அமைந்தது ஒ மை கடவுளே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
குறிப்பாக 2023 மட்டுமே கைவசம் பத்து படங்கள் வைத்திருக்கிறார் இதனால் ரொம்ப பிசியான நடிகையாக வாணி போஜன் இருக்கிறார் இப்படி ஓடினாலும் அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் நடக்கும்..
விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். வாணி போஜன் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. சினிமாவில் யாரும் என்னிடம் தவறாக நடந்து கொண்டதில்லை ஆனால் சில சோசியல் மீடியாக்கள் என்னை குறி வைத்து தவறாக செய்திகள் பரப்பி வருகின்றனர். அது எனக்கு கஷ்டமாக இருக்கும் சேலையை அட்ஜஸ்ட் செய்வதை கூட ஜூம் பண்ணி எடுக்கிறார்கள்..
அது நமக்கு சங்கடமாக இருக்கும் என வாணி போஜன் கூறி உள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் திறமையான நடிகர், நடிகைகள் வளர விடாமல் இதுபோன்று ஆரம்பத்திலேயே கிசுகிசுவில் மாட்டிவிட்டு சோலியை முடிக்க பார்க்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.. இந்த செய்தியை தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.