நடிகை வாணி போஜன் தவறவிட்ட மெகா ஹிட் படம்.! இந்த படத்துல நடிச்சி இருந்த அவரோட ரேஞ்சே வேற..

vanibhojan
vanibhojan

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர். வாணி போஜன் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை தொகுப்பாளராகவும் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு ஒரு கட்டத்தில் இவருக்கு வெள்ளி திரை வாய்ப்பு கிடைக்க.. அதை பயன்படுத்திக் கொண்டு தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஆம் இவர் வெள்ளித் திரையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே மீரா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்.

வாணி போஜன். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார் இது சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மற்றும் வாணி போஜனின் நடிப்பும் இதில் பெரிய அளவில் பேசப்பட்டது.

தற்போது இவர் கைவசம் மிரல், பாயும் ஒலி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய் போன்ற பல படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் வாணி போஜன் சின்னத்திரையில் என்ட்ரி ஆவதற்கு  முன்பு மாடலிங் துறையில் இருந்தார். அப்போதே அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அப்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு வந்தது.

ஆனால் என்ன ரோல் என்று தெரியாது. அதனால் எப்போதாவது கௌதம் மேனன் சாரை பார்த்தால் அது என்ன ரோல் என கேட்க வேண்டும் என்று கூறினார். நடிகை வாணி போஜன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அப்போது நடித்திருந்தால் இவரது ரேஞ்சே வேற லெவலில் சென்றிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.